கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைப்பெற்றது இதில் மாவட்ட கல்வி அலுவலர் திரு ரெ.பரமசிவம் கோளரங்கத்தை மாணவர்கள் கண்டுகளிக்க திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் . இவிழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு .சி.சிவகுமார் தலைமை வகித்தார் .விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் .திரு .வே.தமிழரசு ,வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு . வைத்திலிங்கம் ,வட்டார வளர்ச்சி அலுவலர் திரு .அப்துல் ரஹீம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் திரு . எல்.பிரபாகரன்,சுவாமிநாதன் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜ்குமார்,மாவட்ட சுற்று சூழல் அலுவலர் டாக்டர்.த.கிருஷ்ணகுமார்,பஞ்சாயத்து தலைவர்.திருமதி.சுமதி ராமநாதன் ,ஒன்றிய கவுன்சிலர்.திரு.அய்யா.செந்தில் குமார். கோளரங்க அமைப்பாளர் திரு . அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.