Tuesday, October 23, 2012

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு


கந்தர்வக்கோட்டை,: 21,
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டுக்கான ஆண்டாய்வு முத ன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமை யில் நடந்தது.
இந்த ஆண்டாய்வில் பள்ளியின் சுற்றுச்சூழல், சுகாதாரம், வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவு, அலுவலக பதிவேடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்களின் அடைவ நிலைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்முடிவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பள்ளியின் முன்னேற்றம் குறித்து ஆசிரியர்களி டம் கருத்து கேட்கப்பட் டது.
இறுதியாக பள்ளியின் வளர்ச்சிக்காக இதே பள்ளி யில் படித்து தற்போது இதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் தங்கப்பன், சண்முகம், தங்கப்பா, ராஜேந்திரன், தெய்வீகன், குமரவேல், முருகாயி, மணிகண்டன், மாரிமுத்து, மனோகரன், நீதி ராஜன் தங்கதுரை ஆகியோர் அடங் கிய குழு அமைக்க வலியுறுத்தினார். ஆண்டாய்வில் மாவட்ட கல்வி அலுவலர் வீரவெள்ளச்சாமி, சுற்றுச்சூழல் அலுவலர் காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் மாரி முத்து, நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Wednesday, October 17, 2012

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு - முதன்மைக்கல்வி அலுவலர் மதிப்புமிகு நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடக்கிறது

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி செயல்பாடுகளை  ஆய்வு செய்ய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையிலான குழுவினர் 2012 அக்டோபர் 18ந் தேதி வியாழக்கிழமை   ஆய்வு செய்ய உள்ளனர்.

இவ்வாய்வில் பள்ளி செயற்பாடுகள் ,ஆசிரியர்களின் கற்பித்தல் யுக்திகள் உள்ளிட்டவையும்,மாணவர்களின் அடைவுத்திறன் மற்றும் பதிலளித்தல் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

பாட இணை செயற்பாடுகளான அனைத்து துறை மன்றங்கள் ,பாரத சாரண இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம்,பசுமைப்படை ஆகியவற்றின் செயற்பாடுகளும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வுக்கு வருகை தரும் அனைத்து அலுவலர் பெருமக்களையும் பள்ளியின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்......