Wednesday, October 17, 2012

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு - முதன்மைக்கல்வி அலுவலர் மதிப்புமிகு நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடக்கிறது

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி செயல்பாடுகளை  ஆய்வு செய்ய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையிலான குழுவினர் 2012 அக்டோபர் 18ந் தேதி வியாழக்கிழமை   ஆய்வு செய்ய உள்ளனர்.

இவ்வாய்வில் பள்ளி செயற்பாடுகள் ,ஆசிரியர்களின் கற்பித்தல் யுக்திகள் உள்ளிட்டவையும்,மாணவர்களின் அடைவுத்திறன் மற்றும் பதிலளித்தல் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

பாட இணை செயற்பாடுகளான அனைத்து துறை மன்றங்கள் ,பாரத சாரண இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம்,பசுமைப்படை ஆகியவற்றின் செயற்பாடுகளும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வுக்கு வருகை தரும் அனைத்து அலுவலர் பெருமக்களையும் பள்ளியின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்......


No comments:

Post a Comment