கந்தர்வக்கோட்டை,: 21,
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டுக்கான ஆண்டாய்வு முத ன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமை யில் நடந்தது.
இந்த ஆண்டாய்வில் பள்ளியின் சுற்றுச்சூழல், சுகாதாரம், வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவு, அலுவலக பதிவேடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்களின் அடைவ நிலைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்முடிவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பள்ளியின் முன்னேற்றம் குறித்து ஆசிரியர்களி டம் கருத்து கேட்கப்பட் டது. இறுதியாக பள்ளியின் வளர்ச்சிக்காக இதே பள்ளி யில் படித்து தற்போது இதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் தங்கப்பன், சண்முகம், தங்கப்பா, ராஜேந்திரன், தெய்வீகன், குமரவேல், முருகாயி, மணிகண்டன், மாரிமுத்து, மனோகரன், நீதி ராஜன் தங்கதுரை ஆகியோர் அடங் கிய குழு அமைக்க வலியுறுத்தினார். ஆண்டாய்வில் மாவட்ட கல்வி அலுவலர் வீரவெள்ளச்சாமி, சுற்றுச்சூழல் அலுவலர் காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் மாரி முத்து, நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் |
Tuesday, October 23, 2012
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment